மதுராந்தகம் நகரில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் மதுராந்தகம், முதுகரை, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களைச் சந்தித்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார்.
இந்தப் பிரசார நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலர் கே.குமார், மதுராந்தகம் நகர்மன்ற முன்னாள் தலைவர் மலர்விழி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வாசுதேவன், பொன்னுசாமி, நாகேஷ், மதிமுக நிர்வாகி சாமிநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சூ.க.ஆதவன் உள்ளிட்டோர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சியினர் இருசக்கர வாகனங்களில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுராந்தகம் பழைய வட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.