நாளை கிராமசபைக் கூட்டம்
By DIN | Published On : 04th August 2019 01:23 AM | Last Updated : 04th August 2019 01:23 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை மற்றும் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற இருப்பதாக ஆட்சியர் பா.பொன்னையா சனிக்கிழமை தெரிவித்தார்.
மாவட்டத்தில் குருவன்மேடு, கொண்டமங்கலம், நஞ்சிபுரம், ஆட்டுப்புத்தூர், சிங்காடிவாக்கம் ஆகிய 5 ஊராட்சிகளில் பயனாளிகளுக்கு கறவைப் பசுக்களும், 54 கிராம ஊராட்சிகளில் வெள்ளாடுகள், செம்மறியாடுகளும் வழங்கப்படவுள்ளன. இதற்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் அந்தந்த கிராமப் பகுதிகளில் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக திங்கள்கிழமையும் (ஆக. 5), இதைத் தொடர்ந்து, வரும் 15, 16 ஆகிய தேதிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.