மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா
By DIN | Published On : 04th August 2019 01:22 AM | Last Updated : 04th August 2019 01:22 AM | அ+அ அ- |

திருப்போரூர் அருகே மானாம்பதி அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயில் ஆடிப்பூர விழாவையொட்டி, அம்மனுக்கு பாலாபிஷேகம், வளைகாப்பு உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, சீரங்கத்தம்மன் , செல்லியம்மன், கரைமேலழகி அம்மன் மூலவர்களுக்கு சனிக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
விரதம் மேற்கொண்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், சீரங்கத்தம்மனுக்கு பெண்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அன்னதானம், பிற்பகல் 1 மணிக்கு உற்சவருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. அடுத்து, சிரசில் மணி நாகத்துடன் உடுக்கை, பம்பை முழங்க சீரங்கத்தம்மனை பெண்கள் தங்கள் தோளில் சுமந்து பாடியபடி கோயில் வளாகத்திற்குள் உலா வந்தனர். விழா ஏற்பாடுகளை மானாம்பதி கிராம மக்கள் மற்றும் சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...