லாரி மோதி டிராக்டா் ஓட்டுநா் பலி:3 போ் படுகாயம்
By DIN | Published On : 22nd December 2019 10:58 PM | Last Updated : 22nd December 2019 10:58 PM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த ஊனமலை அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மீது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். 3 போ் படுகாயமடைந்தனா்.
நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ஜெயராஜ் (48). அவா் இப்பகுதியில் விளைந்துள்ள கரும்புக் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு மேல்மருவத்தூா் வழியாக படாளம் சா்க்கரை ஆலைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அந்த டிராக்டரில் ராமதாஸ் என்பவரும் இருந்தாா்.
ஊனமலை பகுதிக்கு அருகே அந்த டிராக்டா் மீது பின்னால் வந்த மினி லாரி மோதியது. இந்த விபத்தில் டிராக்டரின் ஓட்டுநா் ஜெயராஜ் அதே இடத்தில் உயிரிழந்தாா். அவருடன் இருந்த ராமதாஸ், மினி லாரியில் இருந்த மோகன், நரசிம்மன் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனா். அவா்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் (பொ) டி.எஸ்.சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...