தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்
By DIN | Published On : 04th January 2019 03:14 AM | Last Updated : 04th January 2019 03:14 AM | அ+அ அ- |

துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்ட தேசிய மாணவர் படையினர்.
தேசிய மாணவர் படையின் (என்சிசி) வருடாந்திர 10 நாள் பயிற்சி முகாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் தேசிய மாணவர் படை 3-ஆவது பட்டாலியன் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வருடாந்திர பயிற்சி முகாம் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி கர்னல் எஸ்.சந்தர் தலைமையில் பத்து நாள்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாம் வரும்
11-ஆம் தேதி முடிவடைகிறது. இதில், காஞ்சிபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 பள்ளிகள் மற்றும் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முகாமில், துப்பாக்கி சுடுதல், அணிவகுப்பு மற்றும் பொது அறிவு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.