நாட்டு நலப் பணித் திட்ட முகாம்
By DIN | Published On : 04th January 2019 03:13 AM | Last Updated : 04th January 2019 03:13 AM | அ+அ அ- |

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருந்தாக்கியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், 15-ஆம் ஆண்டு சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி மதுராந்தகத்தை அடுத்த திருமுக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் மருத்துவர் இ. ஸ்ரீலேகா செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலரும், உதவிப் பேராசிரியருமான
எஸ்.முருகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டி.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், உத்தமநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை பி.சரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் எஸ்.முருகன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
வருகிற புதன்கிழமை (ஜன. 9) வரை நடைபெற உள்ள இம்முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, உடற்பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.