சாலை சீரமைப்புப் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்
By ஸ்ரீபெரும்புதூர், | Published On : 07th January 2019 12:35 AM | Last Updated : 07th January 2019 12:35 AM | அ+அ அ- |

வடகால் பிரதான சாலை சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்கு உள்பட்ட வடகால் கிராமத்தில், வடகால் பிரதான சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வடகால் பிரதான சாலையை சீரமைக்க 14-ஆவது நிதிக் குழு மானியத்தின் மூலம், ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இச்சாலை சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது. இப்பணியை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி தொடங்கிவைத்தார். இதில், அதிமுக ஒன்றியச் செயலாளர் முனுசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்ராஜன், ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் சேதுராஜஇளவழகன், முன்னாள் ஊராட்சித் தலைவர் விமலாதேவிதர்மன் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள், அதிமுகவினர் கலந்து கொண்டனர்.