செங்கல்பட்டில் மருத்துவர்கள் தின விழா
By DIN | Published On : 03rd July 2019 04:20 AM | Last Updated : 03rd July 2019 04:20 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை மருத்துவர்கள் தின விழா கொண்டாட்டப்பட்டது.
மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷாசதாசிவன் தலைமை வகித்துப் பேசுகையில் மருத்துவர்களின் சேவை என்பது சிகிச்சை பெற வருவோரிடம் அன்புகாட்டி அரவணைத்து, நோயாளிகளுக்கு இருக்கும் நோய் முழுமையாக குணமடைந்து விடும் என்ற நம்பிக்கை பிறக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் அனிதா, குழந்தைகள் நலப்பிரிவுத் துறையின் தலைவர் சத்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு மத்திய தொழுநோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வினீத்குமார் சத்தா சிறப்புரையாற்றினார்.
மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ஹரிஹரன், செல்வராஜ், சண்முகம், மாலா உள்ளிட்ட துறைத் தலைவர்கள், மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மருத்துவமனைக்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பசுமைச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.