ஆசிரியர் தகுதித்தேர்வு: 5,965 பேர் எழுதினர்

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 5965 பேர் சனிக்கிழமை எழுதினர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 5965 பேர் சனிக்கிழமை எழுதினர்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரப்பாக்கம், ஆனந்தவல்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு லிட்டில் ஜாக்கி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரத்தில் காமராஜர் சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜர் சாலை வட்டாட்சியர் அலுவலக வளாக ஆந்தரசன் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை பட்ரோடு மான்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 15 மையங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் நாள் நடைபெற்றது.
 விண்ணப்பித்த 6 ஆயிரத்து 725 தேர்வர்களில் 760 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 5965 தேர்வர்கள் தேர்வெழுதினர். இதைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 22 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 493 பேர் தேர்வு எழுத உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com