அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம்:பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 14th June 2019 04:18 AM | Last Updated : 14th June 2019 04:18 AM | அ+அ அ- |

அறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பட்டயப்பயிற்சிக்கு பிளஸ் 2 வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வழி படித்த பட்டதாரிகள் தகுதியுடையோர் ஆவர். நிகழாண்டு ஜூன் 1 -ஆம் தேதியன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பட்டயப் பயிற்சிக்காலம் 36 வாரங்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.ஜூலை 10 -ஆம்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.14,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பயிற்சிக்கான விண்ணப்பங்களை பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்:5-ஏ, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் - 631 501 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-27237699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.