அடிப்படை வசதிகள் இல்லை: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டம்
By DIN | Published On : 28th March 2019 04:04 AM | Last Updated : 28th March 2019 04:04 AM | அ+அ அ- |

கூடுவாஞ்சேரியில் உள்ள 3 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடுவாஞ்சேரி அருகில் உள்ள கீரப்பாக்கம், நல்லாம்பாக்கம் மற்றும் குமிழி ஆகிய கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த ஊராட்சிகளில் கடந்த 19 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த 3 கிராம மக்களும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி, வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாக்கு சேகரிக்க எங்கள் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என்பதற்காக கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...