தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம்
By DIN | Published On : 28th March 2019 04:04 AM | Last Updated : 28th March 2019 04:04 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்பில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம் என தேர்தல் பொது பார்வையாளர் டெபசிதாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் சார்பில், மக்களவைத் தேர்தலையொட்டி ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக டெபசிதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிட்லபாக்கத்திலுள்ள, தாம்பரம் ஊரக வளர்ச்சித்துறை விருந்தினர் மாளிகை தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான புகார்கள், கோரிக்கைகளைப் பெறவுள்ளார்.
அதன்படி, நாள்தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் தன்னை நேரில் சந்தித்து புகார்களை அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...