ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூர் பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் நடைபெற்ற 33-ஆவது ஆண்டு விழாவுக்கு, செயலர் சிவானந்தம் தலைமை வகித்தார். முதல்வர் கணேஷ் வைத்தியநாதன் முன்னிலை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற டாஃபே நிறுவன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு தலைமைப் பொறியாளர் சசிகுமார் பேசியது:
இன்றைய தொழில்துறை நிறைய மாற்றங்களை எதிர்நோக்கி உள்ளது. பொறியாளர்கள் அதிக சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்குப் பொறியியல் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, கல்லூரியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பணிக்கர் விருது, தேவகி முத்தையா விருது உள்ளிட்ட விருதுகளும், 20 மாணவர்கள், 4 பேராசிரியர்களுக்கு சிறப்புப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறந்த முன்னாள் மாணவர் விருது சௌமியா மகாதேவனுக்கு வழங்கப்பட்டது. இதில், மாணவர் சங்கத் தலைவர் மதுவந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.