உத்தரமேரூரை அடுத்த மானாம்பதி கிராமத்தில் இருளர், பழங்குடியினருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்ட சட்டப் பணிகள் குழு, குழந்தைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மானாம்பதி கிராமத்தில் நடத்திய இருளர், பழங்குடியினருக்கான சட்ட விழிப்புணர்வு முகாமுக்கு, உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.
தொண்டு அமைப்பு நிர்வாகி ராஜி முன்னிலை வகித்தார். இதில், இருளர், பழங்குடியின மக்களுக்கான அரசின் சலுகைகள், அவற்றைச் சட்டத்தின் மூலம் பெரும் முறைகள், கொத்தடிமைகளை மீட்கும் வழிமுறைகள், பழங்குடியினப் பெண் குழந்தைகளுக்கான கல்வி, பெண்கள் பாலியல் தொந்தரவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகள், கல்வி உதவித் தொகை பெறுதல், மகளிர் வளர்ச்சிக்கான சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இருளர், பழங்குடியினரின் கேள்விகளுக்கு நீதிபதி சச்சிதானந்தம் பதிலளித்தார். அத்துடன், அவர்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், வழக்குரைஞர்கள், தன்னார்வலர்கள், கிராமத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.