காஞ்சியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
By DIN | Published On : 05th May 2019 12:39 AM | Last Updated : 05th May 2019 12:39 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை புத்தகக் கண்காட்சி தொடங்கியது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் "காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா' காமராசர் சாலையில் உள்ள முசுகு பலிஜ குல சத்திரம் மஹாலில் சனிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை அரிமா சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் மகேஷ், நித்யகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வரும் 12-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வாசகர்கள் வருகை தரலாம். அனுமதி இலவசம்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உள்ளது. இக்கண்காட்சியில் இலக்கியம், நாவல், வரலாற்று நூல்கள், அறிவியல், போட்டித்தேர்வு நூல்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரவிவர்மா, சரவணன், கார்த்திக் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.