மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் வரைவுப் பட்டியல் குறித்து அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வார்டுகளுக்கான வரைவுப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு, மறைமலைநகர் நகராட்சி ஆணையர் விஜயகுமாரி தலைமை வகித்தார்.
பொறியாளர் ரகுபதி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வார்டுகளை வரையறைப்படுத்துதல், வாக்காளர் பட்டியல் கணக்கெடுத்தல், வார்டுகளில் உள்ள மக்கள் தொகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதில், மறைமலைநகர் வார்டுகளுக்குட்பட்ட முன்னாள் நகர மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், திமுக, அதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.