அரசுப் பேருந்து மோதி தனியார் ஊழியர் சாவு
By DIN | Published On : 15th May 2019 04:05 AM | Last Updated : 15th May 2019 04:05 AM | அ+அ அ- |

கூடுவாஞ்சேரியில் அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
செங்கல்பட்டை அடுத்த மெய்யூர் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த வரதன் என்பவரின் மகன் சேகர் (34). அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சேகர் திங்கள்கிழமை பணி முடித்து இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து அவரது வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.