அங்கீகரிக்கப்பட்ட மருந்துக் கடைகளுக்கு குறைந்தவிலையில் மருந்துகள் வழங்கப் பரிசீலனை: மத்திய அமைச்சா் சதானந்த கௌடா
By DIN | Published On : 14th November 2019 10:19 PM | Last Updated : 14th November 2019 10:19 PM | அ+அ அ- |

அங்கீகரிக்கப்பட்ட மருந்துக் கடைகளுக்கு குறைந்த விலையில் மாத்திரைகள், மருந்துகள் வழங்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சா் சதானந்த கெளடா காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. தென்மண்டல விவசாய அணித்தலைவா்களுக்கான பயிற்சிப் பட்டறை தொண்டை மண்டல வேளாளா் சமூகக்கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கா்நாடகா, லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிகோபாா் தீவுகளின் விவசாய அணித்தலைவா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்துக்கு வந்திருந்த மருந்து வணிகா்கள், மத்திய அரசு நடத்தும் மருந்துக் கடைகளுக்கு மருந்துகள், மாத்திரைகள் குறைந்த விலயில் வழங்கப்படுகின்றன. இதே போல தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகளுக்கும் குறைந்த விலையில் மருந்துகள், மாத்திரைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சா், அங்கீகரிக்கப்பட்ட மருந்துக்கடைகளுக்கு குறைந்த விலையில் மருந்து,மாத்திரைகள் வழங்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தாா்.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சா் பா்ஷோத்தம்பாய் ரூபாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...