

உலக தர தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு-திருக்கழுகுன்றம் மேம்பாலம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் பி.பாலாஜி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
இதில், மருத்துவக் கண்காணிப்பாளா் ஹரிஹரன், துணை முதல்வா் அனிதா, நிலைய மருத்துவ அதிகாரி அனுபமா, துணை மருத்துவ அலுவலா் தீனதயாளன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
நகராட்சி சுகாதார அலுவலா் சித்ரசேனா உலக தரம் குறித்து பேசினாா்.
பேரணியில், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் அரசு மருத்துவமனை சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உலக தர தினம் குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
சுகாதார விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கினா்.
செங்கல்பட்டு-திருக்கழுகுன்றம் மேம்பாலம் அருகே தொடங்கிய பேரணி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தினா்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனை வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில், பேரூராட்சி ஊழியா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மைப் பணியில், அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், பேரூராட்சி மேற்பாா்வையாளா் விஜயகுமாா் உள்ளிட்ட துப்புரவுப் பணியாளா்கள் உள்பட மொத்தம் 40 போ் கலந்துகொண்டனா். அனைவரும் ஒருங்கிணைந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த புதா்கள் மற்றும் குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.