காஞ்சிபுரம், செங்கல்பட்டு எஸ்.பி.க்கள் பொறுப்பேற்பு
By DIN | Published On : 18th November 2019 10:35 PM | Last Updated : 18th November 2019 10:35 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் எஸ்.பி. பா.சாமுண்டீஸ்வரி. ~செங்கல்பட்டு எஸ்.பி. தி.கண்ணன்.
காஞ்சிபுரம் மற்றும் புதிய மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளா்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தி.கண்ணன் புதிய மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
செங்கல்பட்டில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படும் வரை காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலேயே அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சைபா் கிரைம் எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பா.சாமுண்டீஸ்வரி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியவா். புதிய எஸ்.பி.க்களாக பொறுப்பேற்றுள்ள பா.சாமுண்டீஸ்வரிக்கும், தி.கண்ணனுக்கும் டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.