அத்திவரதர் பெருவிழா: சிறப்பாகப் பணியாற்றிய வனத்துறையினருக்குப் பாராட்டு
By DIN | Published On : 06th October 2019 04:12 AM | Last Updated : 06th October 2019 04:12 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் விழாவின் போது சிறப்பாகப் பணியாற்றிய வனத்துறையைச் சேர்ந்த 10 பேருக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா சனிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாள்கள் நடைபெற்றது. இவ்விழாவின் போது சிறப்பாகப் பணியாற்றிய வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனச்சரகர்கள் 10 பேருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் ஜெ.சரவணன், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, வனச்சரகர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...