இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 09th October 2019 05:12 AM | Last Updated : 09th October 2019 05:12 AM | அ+அ அ- |

உத்தரமேரூர் வட்டத்துக்கு உள்பட்ட சாலவாக்கம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் அரிமா சங்கம், அறம் அறக்கட்டளை இணைந்து பொது மற்றும் பல் மருத்துவ முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.
அரிமா சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் ராஜ்குமார், பொருளாளர் தாஜுதீன் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறம் அறக்கட்டளை நிர்வாகி மணிவண்ணன் வரவேற்றார். தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
சாலவாக்கம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G