ஓசூரம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை
By DIN | Published On : 09th October 2019 05:15 AM | Last Updated : 09th October 2019 05:15 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு நத்தம் ஓசூரம்மன் கோயிலில் தசரா திருவிழா விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை யொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 50-ஆம் ஆண்டாக தசரா திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அன்னதானம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், நவராத்திரி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.