குளத்தில் ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 01st September 2019 12:50 AM | Last Updated : 01st September 2019 12:50 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அருகே நீர்வல்லூர் கிராமத்தில் குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீர்வல்லூர் கிராமத்தில் மேலபடவூர் சுடுகாடு அருகில் உள்ள குளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீஸார் தலையில் வெட்டுக் காயங்களுடன் இருந்த சடலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் கட்டட மேற்பார்வையாளராக பணிபுரியும் நீர்வல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜா(45) என்பதும், அவருக்கு மீனாட்சி (35) என்ற மனைவியும், ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்தது. இது தொடர்பாக மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.