"தாழம்பூரில் தள்ளுபடியில் விற்கப்படும் வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் '
By DIN | Published On : 01st September 2019 12:50 AM | Last Updated : 01st September 2019 12:50 AM | அ+அ அ- |

திருப்போரூர் அருகேயுள்ள தாழம்பூரில் வீட்டு மனைகள் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாந்து விட வேண்டாம் என ஆட்சியர் பா.பொன்னையா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம் தாழம்பூர் கிராமத்தில் வீட்டு மனைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது என விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இக்கிராமத்தில் சில மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் விற்பனை தொடர்பாக விசாரணை செய்ய அரசு உத்தரவிட்டு அதனடிப்படையில் விசாரணை நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.
எனவே தாழம்பூர் கிராமத்தில் விலை தள்ளுபடி விளம்பரத்தை நம்பி மனைகள் மற்றும் வீடுகள் வாங்கினால் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்காது. அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு அனைவரும் உட்பட வேண்டும்.