நல்லாசிரியர் விருது பெற்றவருக்குப் பாராட்டு
By DIN | Published On : 11th September 2019 04:27 AM | Last Updated : 11th September 2019 04:27 AM | அ+அ அ- |

ஆசிரியர் தினத்தன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற செங்கல்பட்டு தூயகொலம்பா மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளியில் உடல்கல்வி ஆசிரியராக பணிபுரியும் ஜா.இளங்கோ பெஞ்சமினுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
இதற்காக உடற்கல்வி ஆசிரியர் ஜா.இளங்கோ பெஞ்சமினுக்கு சிஎஸ்ஐ அலிசன் காசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மேனுவல் ஜாப்ஜ் சத்யகுமார் தலைமை வகித்து, ஆசிரியரை பாராட்டினார். ஓய்வு பெற்ற உதவி ஆசிரியர் நெல்சன் வாழ்த்துரை வழங்கினார்.