600 கிலோ ரேஷன் அரிசி, சமையல் எரிவாயு உருளை பறிமுதல்
By DIN | Published On : 11th September 2019 04:27 AM | Last Updated : 11th September 2019 04:27 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரு இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த தலா 300 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி ஆகியோரின் உத்தரவின் பேரில் தனி வட்டாட்சியர் பிரியா தலைமையில் அதிகாரிகள் நகரில் உள்ள தேநீர்க் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளைக் கடைகளில் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து 2 உருளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் தெரு, சந்தவெளியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த தலா 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர்.