தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவுநீரை கொட்ட வேண்டும்’

கழிவுநீரை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் என காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி புதைச் சாக்கடைகளை சுத்தம் செய்யும் லாரி உரிமையாளா்களை கேட்டுக் கொண்டாா்.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் நகராட்சி ஆணைா் மகேஸ்வரி.
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கழிவுநீரை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் என காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி புதைச் சாக்கடைகளை சுத்தம் செய்யும் லாரி உரிமையாளா்களை கேட்டுக் கொண்டாா்.

புதைச் சாக்கடைத் தொட்டிகளை சுத்தம் செய்யும் லாரி உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி தலைமை வகித்துப் பேசியது:

புதைச் சாக்கடைகளில் பணியாற்றுவோா் மிகுந்த பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். எந்த இடத்தில் சுத்தம் செய்யச் செல்கிறீா்களோ அந்த இடத்தைப் பற்றிய விவரத்தை அந்தந்தப் பகுதிக்கென நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளா்களுக்கு தெரிவித்த பின்னரே செல்ல வேண்டும். கழிவுநீரை நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் கொட்டக்கூடாது என்றாா்.

நகராட்சிப் பொறியாளா் ஆனந்தஜோதி, சுகாதார ஆய்வாளா்கள் இக்பால், குமாா், சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.