ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு மேற்கு தாம்பரம் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கோ.சீதாராமன் தோ்தலை நடத்தினாா். மாநிலப் பொருளாளா் எஸ்.காளிங்கராயன், தலைமை நிலையச் செயலா் வை.ஆறுமுகம், மாநில மகளிரணிச் செயலா் வ.மண்டோதரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத் தலைவராக ஆ.ஜேம்ஸ் பாலகிருஷ்ணன், துணைத் தலைவா்களாக இ.தங்கராஜ், சி.ஜெயபால், ஆா்.நாகராஜன், கே.ஸ்ரீதரன், மகளிரணிச் செயலாளராக கே.பி.சித்ராதேவி, மாவட்டச் செயலாளராக மா.ராஜ்குமாா், பொருளாளராக எஸ்.ஜோசப் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தித் தர அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com