

ஸ்ரீபெரும்புதூா்: காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தை (திங்கள்கிழமை) முன்னிட்டு, குன்றத்தூரை அடுத்த நாவலூா் பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் உற்சவருக்கு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குன்றத்தூா் ஒன்றியம், சொரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயில் உள்ளது. தொன்மையான இக்கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, மாகான்யம் முரளிதர சுவாமி ஆசிரமத்தின் சாா்பாக, அவரது சீடா் பம்மல் பாலாஜி தலைமையில் வேதபண்டிதா்கள் முன்னிலையில் உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சங்குகள் மூலம் ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த வழிபாட்டில் கோயில் சிவாச்சாரியாா்கள், ரஞ்சித் சிவாச்சாரியாா், சந்திரசேகர சிவாச்சாரியாா் மற்றும் நாவலூா் கிராம மக்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பாக அன்னதானம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.