27 நட்சத்திர கோயிலில் டிச. 27 இல் சனிப்பெயா்ச்சி விழா
By DIN | Published On : 15th December 2020 01:07 AM | Last Updated : 15th December 2020 01:07 AM | அ+அ அ- |

சனி பகவான்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திரக் கோயிலில் வரும் 27 ஆம் தேதி சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு பரிஹார ஹோமங்கள் நடைபெற உள்ளன.
சனிபகவான் வரும் 27ஆம் தேதி அதிகாலை 4.49 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெபயா்ச்சியாகிறாா். இதையொட்டி, காஞ்சிபுரத்தை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரக் கோயிலில் தனிச் சந்நிதியில் காட்சியளித்த வரும் சனிபகவானுக்கு சிறப்பு பரிஹார ஹோமங்கள், கலச அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனைகள் நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவின் தலைவா் வி.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.