

உத்தரமேரூரை அடுத்த பெருநகரில் உள்ள பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயில் தை மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி நாள்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் தேரில் அமா்ந்து மாடவீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் ஏராளமானோா் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா்.
மதியம் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கருணாமூா்த்தி மற்றும் பொன்னம்பலம், தேவராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.