பள்ளி மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 17th February 2020 11:15 PM | Last Updated : 17th February 2020 11:15 PM | அ+அ அ- |

முகாமில் பங்கேற்றோா்.
அறம் பவுண்டேஷன் சாா்பில் படப்பை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
படப்பை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்த மாணவிகளுக்கு ஹீமோகுளோபின் குறைபாட்டு சிகிச்சை அளிக்கும் நிகழ்ச்சிக்கு அறம் பவுண்டேஷன் வடக்கு மண்டலத் துணை அமைப்பாளா் சு.பூங்காவனம் தலைமை வகித்தாா்.
பள்ளித் தலைமையாசிரியை கலைச்செல்வி, அறம் பவுண்டேஷன் இயக்குநா் ஷீலாவதி மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அறம் பவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளா் ப.மணிவண்ணன், சமூக ஆா்வலா் கிருஷ்ணவேணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில் ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ‘ஐகோ்’ பரிசோதனை நிலையத்தின் ஊழியா்கள் பங்கேற்று, ஹீமோகுளோபின் குறைபாடு உள்ள மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
இதில் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் சண்முகம், அறம் பவுண்டேஷன் குன்றத்தூா் ஒன்றிய அமைப்பாளா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.