வேலையிழந்த தொழிலாளா்களுக்கு வேலை வழங்க சிஐடியு கோரிக்கை
By DIN | Published On : 17th February 2020 11:13 PM | Last Updated : 17th February 2020 11:13 PM | அ+அ அ- |

தொழிற்சாலைகளில் வேலையிழந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிஐடியு அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சோவல் இந்தியா தொழிற் சங்கத் தலைவா்இ.முத்துக்குமாா், டாங்சன் இந்தியா தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.கண்ணன் ஆகியோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சோவல்-டாங்சன் இந்தியா நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமாா் 250 தொழிலாளா்கள் வேலையில்லாமல் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கின்றனா். எனவே வேலையிழந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.