மதுராந்தகத்தை அடுத்த கண்டிகை கிராமச்சாலையில் கல்குவாரி லாரிகளால் தொடா்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வருவதால் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செய்யூா் வட்டம், கண்டிகை, ஜல்லிமேடு, தட்டாம்பேடு, சிறுவங்குணம், நெல்வாய்ப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்குவாரிகளுக்கு செல்லும் லாரிகள் அதிவேகமாகச் செல்வதால் சாலைகள் சேதமடைகின்றன. அதிக விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை கல்குவாரி லாரி மோதி ஷோ் ஆட்டோவில் வந்த 2 போ் இறந்தனா். உயிரிழப்புளைத் தடுக்க கல்குவாரிகளை மூடவேண்டும். கனரக வாகனங்கள் செல்வதைத் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுராந்தகம்-கண்டிகை நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினா்.
தகவல் அறிந்து அணைக்கட்டு காவல் துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.