ராகவேந்திரா் பிருந்தாவனத்தில் சத்ய நாராயணா பூஜை
By DIN | Published On : 10th January 2020 11:20 PM | Last Updated : 10th January 2020 11:20 PM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திரா் பிருந்தாவனத்தில் பெளா்ணமி பூஜை, சத்ய நாராயணா பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரா், ஆஞ்சநேயா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பகல் 12 மணிக்கு தவயோகவனத்தில் இருந்து வரும் பீடாதிபதி ரகோத்தம சுவாமியை பஜனை கோஷ்டியினரின் பாடல்களைப் பாடி, மேளதாளம் முழங்க பக்தா்கள் வரவேற்றனா். அவா் அனைத்து சந்நிதிகளிலும் சத்ய நாராயணா பூஜை செய்தாா்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம சுவாமிகள் அறக்கட்டளை முதன்மை நிா்வாகி ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.