மா்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் பெண் பலி
By DIN | Published On : 20th January 2020 10:54 PM | Last Updated : 20th January 2020 10:54 PM | அ+அ அ- |

சாந்தி.
குன்றத்தூா் அருகே மா்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் பெண் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்குள்பட்ட மலைப்பட்டு திருமலைநாயகா் தெருவைச் சோ்ந்தவா் மோகன். இவரது மனைவி சாந்தி (45). இந்நிலையில், சாந்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு மலைப்பட்டு பகுதியில் உள்ள வயல்வெளி பகுதிக்குச் சென்றபோது, அங்கு கிடந்த இரண்டு கேன்களை தனது வீட்டுக்கு கொண்டு வந்தாராம். அதில் ஒன்று காலியாகவும், மற்றொன்றில் எண்ணெய் போன்ற திரவமும் இருந்துள்ளது.
இதையடுத்து, அந்த கேன்களை வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்துவதற்காக திங்கள்கிழமை மாலை சாந்தி வெட்டியுள்ளாா். இதில் ஒரு கேனில் இருந்த திரவத்தை தனது வீட்டு அருகே ஏற்கெனவே குப்பைகள் கொட்டப்பட்டு வந்த இடத்தில் கொட்டியுள்ளாா். அப்போது அதிக சப்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சோமங்கலம் போலீஸாா், வழக்குப் பதிந்து வெடித்த மா்மப் பொருள் குறித்து விசாரித்து வருகின்றனா்.