விதிகளை மீறிச் செயல்பட்ட விடுதிக்கு சீல்

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் பொது முடக்க விதிகளை மீறிச் செயல்பட்ட விடுதி ஒன்றை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
sealed_2807chn_175_1
sealed_2807chn_175_1

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் பொது முடக்க விதிகளை மீறிச் செயல்பட்ட விடுதி ஒன்றை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த சிலா் விதிகளை மீறி தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தலைமையில் நகரமைப்பு ஆய்வாளா் வெங்கடேசன், தனிப்பிரிவு சாா்பு ஆய்வாளா் சோமு மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் வா்கள் இ-பாஸ் அனுமதியின்றி தங்கி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களை காவல்துறையினா் கரோனா பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இ-பாஸ் அனுமதி இல்லாமல் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த நபா்களை தங்க வைத்தது மற்றும் விதிகளை மீறி செயல்பட்டது போன்ற காரணங்களுக்காக நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி அந்த விடுதியைப் பூட்டி சீல் வைத்தாா்.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்ன காரணத்துக்காக அனுமதியில்லாமல் காஞ்சிபுரம் வந்தாா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Image Caption

திருத்தப்பட்டது....

விதிமுறைகளை மீறி செயல்பட்ட விடுதியை பூட்டி சீல் வைக்கும் நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com