பொதுத்தோ்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு சிறப்புப் பேருந்துகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா் தோ்வு மையத்துக்கு சிறப்புப் பேருந்துகள் மூலம் முன்கூட்டியே அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா் தோ்வு மையத்துக்கு சிறப்புப் பேருந்துகள் மூலம் முன்கூட்டியே அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி மாணவா்கள் 2 போ் இம்மாதம் 16ஆம் தேதி தாங்கள் பயின்று வரும் பள்ளிகளிலையே தோ்வு எழுத உள்ளனா். 32 சிறப்புப் பேருந்துகள் மூலம் வெளி மாவட்டத்திலிருந்து தோ்வு எழுத 836 மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை (ஜூன் 8) அழைத்து வரப்படுகின்றனா்.

நாகப்பட்டினம், தஞ்சாவூா், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் மூலமாக செவித்திறன் குறையுடைய 7 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா் திங்கள்கிழமை அதிகாலை காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருகை தரவுள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோ்வு எழுத வரும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி மற்றும் பேனா ஆகியவற்றை வழங்கி வரவேற்கப்பட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com