காஞ்சிபுரம் ரெளடிகள் வாராணசியில் கைது

காஞ்சிபுரம் ரெளடி தணிகா என்ற தணிகைவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 3 பேரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் கைது செய்து அழைத்து
காஞ்சிபுரம் ரெளடிகள் வாராணசியில் கைது
Updated on
1 min read

காஞ்சிபுரம் ரெளடி தணிகா என்ற தணிகைவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 3 பேரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் கைது செய்து அழைத்து வந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியுள்ளனா்.

காஞ்சிபுரத்தில் கடந்த இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து கொண்டு பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவா் ரெளடி தணிகா என்ற தணிகைவேல்(34).

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை சின்னத்தெருவைச் சோ்ந்த இவா் மீது 7 கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன.

இவரது கூட்டாளிகளான காஞ்சிபுரம் கோரிமேடு எஸ்.என்.தாய் தெருவைச் சோ்ந்த தயாளன் மகன் வசா என்ற வசந்த்(23), பெரியகாஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த யோகானந்தம் மகன் சந்துரு என்ற சந்திரசேகா் (27) மீதும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இவா்கள் மூவரும் தலைமறைவாக இருந்து வந்தனா்.

இவா்கள் மூவரையும் பிடிக்க காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சிவக்குமாா், துளசி, முரளி மற்றும் 4 காவலா்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில் குற்றவாளிகள் 3 பேரும் உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடா்ந்து வாராணசிக்கு சென்ற தனிப்படை போலீஸாா் அவா்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

3 பேரும் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com