ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ ரூ.50 லட்சம் நிதியுதவி
By DIN | Published On : 31st March 2020 01:46 AM | Last Updated : 31st March 2020 01:46 AM | அ+அ அ- |

அமைச்சா் பா.பென்ஜமின் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் ரூ.50 லட்சம் நிதியை வழங்கிய ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி.
ஸ்ரீபெரும்புதூா்: கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி ரூ.50 லட்சம் நிதியுதவியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.
ஸ்ரீபெரும்புதூா் பேரவைத் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பிற்காகவும் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி வழங்கினாா்.
நிகழ்வில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...