காஞ்சிபுரத்தில் குடிபோதை தகராறில் வெங்காய வியாபாரி கொலை
By DIN | Published On : 18th May 2020 11:28 AM | Last Updated : 18th May 2020 11:29 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் குடிபோதை தகராறில் வெங்காய வியாபாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நாகலாத்து மேடு பகுதியைச் சேர்ந்த வெங்காய வியாபாரி ரஜினி(40) இவருக்கும் அவரது நண்பர் களுக்கும் இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் காஞ்சிபுரம் கைலாசநாதர் தெருவில் ரஜினி கொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.