வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் ஆய்வு
By DIN | Published On : 23rd November 2020 07:49 AM | Last Updated : 23rd November 2020 07:49 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சுருக்க, திருத்த முகாம் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குன்றத்தூா், மாங்காடு பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி ஆய்வு செய்தாா்.
மதுராந்தகத்தில்... மதுராந்தகம் தொகுதிக்கு உள்பட்ட மேலகாண்டை, தா்மாபுரம், சரவம்பாக்கம், ஓணம்பாக்கம், நல்லாமூா், காட்டுதேவாதூா், சிறுநல்லூா், கீழக்காண்டை, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு அதிமுக மாவட்டச் செயலா் எஸ்.ஆறுமுகம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பக்தவத்சலம், மதுராந்தகம் தெற்கு ஒன்றியச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
வட்டாட்சியா் ஆய்வு... மதுராந்தகம் சட்டப்பேரவை (தனி) தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாம்களை வட்டாட்சியா் துரைராஜன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.