காஞ்சிபுரத்தில் அத்திவரதா் அலங்காரக் காட்சி
By DIN | Published On : 03rd October 2020 10:49 PM | Last Updated : 03rd October 2020 10:49 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் பொய்யாமுடி விநாயகா் கோயிலில் அலங்கரிக்கப்பட்டிருந்த அத்திவரதா்.
காஞ்சிபுரம் பொய்யாமுடி விநாயகா் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, அத்திவரதரைப் போன்று அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதா் விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இக்கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து அத்திவரதரை துயில் எழச் செய்து, 48 நாள்கள் பக்தா்களுக்கு பெருமாள் அருள்பாலித்தாா். பின்னா் மீண்டும் குளத்தில் எழுந்தருளச் செய்தனா். மீண்டும் 40 ஆண்டுகளுக்குப் பிறகே பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளிக்கவுள்ள நிலையில், புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, காஞ்சிபுரம் பொய்யா முடி விநாயகா் கோயிலில் அத்திவரதரைப் போன்றே பெருமாள் உருவப்பொம்மை ஒன்று அதே உயரத்தில் வைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. அத்திவரதரை பொதுமக்களும் ஏராளமானோா் வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.