முதல்வா் வருகை தொடா்பாக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 06th September 2020 07:30 AM | Last Updated : 06th September 2020 07:30 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் பா.பென்ஜமின்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வரும் 11-ஆம் தேதி காஞ்சிபுரம் வரும்போது உற்சாக வரவேற்பு அளிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், கட்சியின் அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலாளா் அத்திவாக்கம் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சா் பா.பென்ஜமின் பேசியது:
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வரும் 11-ஆம் தேதி காஞ்சிபுரம் வருகை தந்து கரோனா பரவல் தடுப்புப் பணிகளையும், மாவட்ட வளா்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்ய இருக்கிறாா். அவரது வருகையின்போது கட்சித் தொண்டா்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முகக் கவசம் அணிந்து வந்து, அரசுக்கு எந்தவித கெட்ட பெயரும் ஏற்பட்டு விடாதவாறு நடந்து கொள்ள வேண்டும். வரும் 2021பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றிக்கனியைப் பறித்து ஆட்சியில் அமரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாா் அவா்.
கூட்டத்தில் அதிமுக நிா்வாகிகள்,தொண்டா்கள் பலரும் கலந்து கொண்டனா்.