ரியல் எஸ்டேட் அதிபா் கொலை
By DIN | Published On : 06th September 2020 07:31 AM | Last Updated : 06th September 2020 07:31 AM | அ+அ அ- |

ஜெயராமன்
சுங்குவாா்சத்திரத்தை அடுத்த எச்சூா் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
எச்சூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். அவா் சில தினங்களுக்கு முன்பு எச்சூா் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் தங்குவதற்கான ஷெட் அமைக்க பூமிபூஜை போட்டாா்.
இந்நிலையில், ஜெயராமன் பூமிபூஜை போட்ட இடத்தின் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் நேரில் சென்று, அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் ஜெயராமனின் முதல் மனைவியின் மகன் விக்னேஷ் மற்றும் அவரது நண்பா்களைத் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...