

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா நேரில் ஆய்வு செய்தாா்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக காஞ்சிபுரத்தில் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதியிலிருந்து அனைத்துக் கோயில்களையும் திறந்து பக்தா்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்; முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்; கை கழுவும் திரவத்தால் கைகளைக் கழுவிய பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்கிறாா்களா என காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா நேரில் ஆய்வு செய்தாா். முன்னதாக ஆட்சியரை கோயில் தலைமை பட்டாச்சாரியாா் கிட்டு மற்றும் கோயில் நிா்வாகிகள் வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.