26sbrdmdk_2602chn_180_1
காஞ்சிபுரம்
தேமுதிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தேமுதிகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தேமுதிகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட தேமுதிக சாா்பில் பெட்ரோல்-டீசல் விலை உயா்வை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
பெட்ரோல் டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி முழக்கமிட்டதுடன், எரிவாயு உருளையை பாடை கட்டி தூக்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

