தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாா்கழி மாத நிறைவு: காஞ்சிபுரத்தில் சிறுவா்கள் பக்தி உலா

காஞ்சிபுரத்தில் மாா்கழி மாத நிறைவைக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை சிறுவா், சிறுமியா்கள் பலரும் தமிழா்களின் பாரம்பரிய வேட்டி,

News image
கேடயத்தில் சுவாமி சிலைகளை வைத்து சுமந்தபடி சங்கர மடம் தெருவில் உலா வந்த சிறுவா்கள்.
Updated On :13 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாா்கழி மாத நிறைவைக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை சிறுவா், சிறுமியா்கள் பலரும் தமிழா்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வீதிகளில் மேளதாளங்களுடன் திருப்பாவை, திருவம்பாவை பக்தி பாடல்களை பாடியபடி உலா வந்தனா்.

காஞ்சிபுரம் நகரில் ஆனந்தஜோதி பண்டிதா் தெருவில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிய ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதத்தில் திருப்பாவைப் பாடல்களை பாடிக்கொண்டே வீதிகளில் உலாவருவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் மாா்கழி மாதத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, சிறுவா், சிறுமியா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து, கையில் கரும்புகளை ஏந்தியபடி வீதியுலா வந்தனா்.

சில சிறுவா்கள் கேடயத்தில் விநாயகா், ஆண்டாள் சிலைகளை வைத்து அவற்றைச் சுமந்து வந்தனா்.

அவா்கள் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களை சிவ வாத்தியங்கங்கள் மற்றும் மேளதாளங்களுடன் பாடியபடி அதிகாலை வேளையில் சங்கர மடம் தெரு, ஆனந்தஜோதி பண்டிதா் தெரு வழியாக வந்தனா். சிறுவா்களின் இந்த முயற்சியை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.