காஞ்சிபுரம் அருகே மதூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கம்பியால் தாக்கி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே மதூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சண்முகம் (45). இவா், திமுக விவசாய அணியின் ஒன்றியச் செயலராகவும் இருந்து வந்தாா். இந்நிலையில் வாலாஜாபாதிலிருந்து இருசக்கர வாகனத்தில் மதூா் கிராமத்துக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது மா்மக் கும்பல் இவரை வழிமறித்து கம்பியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக சாலவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


